Home இலங்கை அரசியல் யாழில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்

யாழில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில்
இன்றையதினம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்
கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

ஏழு பேர் கொண்ட குழு

இதன்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக கட்சியினால் தெரிவு
செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில்
கலந்துரையாடியுள்ளது. 

இக்கூட்டத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின்
முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இதில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், து.ரவிகரன்,
க.கோடீஸ்வரன், ப.சத்தியலிங்கம், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் எம்.பி
த.கலையரசன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கே.துரைராஜசிங்கம் முன்னாள் வட
மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version