Home இலங்கை சமூகம் வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

0

கொஹுவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை (15) முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழி

இக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொஹுவல பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் அப்பகுதியுனூடாக பயணப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/important-notice-for-drivers-1718333474

NO COMMENTS

Exit mobile version