Home ஏனையவை வாழ்க்கைமுறை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

ஆஸ்துமா நோயால் (Asthma) பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் நோய்க்கான மருந்துகளை  நிறுத்த முயற்சிக்க கூடாது என இலங்கை சுவாச நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க (Neranjan Dissanayake) தெரிவித்துள்ளார்.

உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு நேற்று (24.4.2024) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே விசேட வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்துமா நோய் பாதிப்புக்கள் தொடர்பில் விசேட வைத்தியர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பால் மா விலை குறைப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்த முடியும் 

பல கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு பக்க விளைவுகளை அனுபவிக்கிறார்கள்.

மேலும், ஆஸ்துமா நோய்க்கு வழங்கப்படும் மருந்துகள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட சகல மக்களும் உரிய மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டால் இதனை கட்டுப்படுத்த முடியும் என விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆஸ்துமா உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மருந்தை நிறுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுமென வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க (Neranjan Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் பிரமாண்ட அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி பண்ணை நுவரெலியாவில்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version