Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள கால அவகாசம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள கால அவகாசம்

0

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை, வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கால அவகாசம்

எச்சந்தர்ப்பத்திலும் குறித்த திகதி நீட்டிக்கப்படாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தபால் மூல விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான (www.elections.gov.lk)க்கு பிரவேசித்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version