Home இலங்கை சமூகம் வரவு – செலவுத் திட்டத்தில் வன்னிப் பிராந்தியத்துக்கு முக்கிய திட்டங்கள்

வரவு – செலவுத் திட்டத்தில் வன்னிப் பிராந்தியத்துக்கு முக்கிய திட்டங்கள்

0

வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கவுள்ள நிதியில் முன்மொழியப்பட்ட யாழ்ப்பாணத்திற்கான சில திட்டங்களை  அதை மீளாய்வு செய்து, வன்னிப் பிராந்தியத்துக்கு மாற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கப்படவுள்ள நிதிக்கு வடக்கு மாகாணத்தால் முன்மொழியப்படவுள்ள திட்டங்கள்
தொடர்பான மீளாய்வு கூட்டத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

வீதி அபிவிருத்தி

குறிப்பாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால்
யாழ்ப்பாணத்தில் சில வீதிகளை தரமுயர்த்தும் செயற்றிட்டங்கள்
முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அதைவிடுத்து வன்னியிலுள்ள விவசாயிகள் அதிகம்
பயன்படுத்தும் வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்குமாறும் ஆளுநர் பணித்துள்ளார்.

மேலும், முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவேற்றி
முடிக்கவேண்டியது அந்தத் திணைக்களத் தலைவர்களின் பொறுப்பு என ஆளுநர் இதன்போது
குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version