Home இலங்கை சமூகம் சட்டவிரோத வாகன இறக்குமதி: அரசு மேற்கொண்ட நடவடிக்கை

சட்டவிரோத வாகன இறக்குமதி: அரசு மேற்கொண்ட நடவடிக்கை

0

போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் (Sri Lanka Customs) சமர்ப்பித்து இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் ஒன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் (Colombo Magistrate’s Court) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Dilina Gamage) இன்றையதினம் (12.10.2024) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போலியான தகவல்

போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த ஜீப் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை (Badulla) பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த அதிசொகுசு ஜீப் வாகனம் ஒன்ரே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெலியத்த – புவாக்தண்டாவ, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு அருகில், அரசாங்கத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால், நேற்று (11) பிற்பகல் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை தங்காலை (Tangalle ) உள்ளூராட்சி சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version