Home இலங்கை சமூகம் அரிசி பற்றாக்குறைக்கு இன்றுடன் முடிவு: துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்

அரிசி பற்றாக்குறைக்கு இன்றுடன் முடிவு: துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்

0

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு இன்று முதல் சந்தைக்கு வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தனியார் இறக்குமதியாளர்களால் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சம்பா மற்றும் வெள்ளை பச்சை அரிசி நேற்று துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன், அதில் 75 தொன்கள் நேற்றிரவு சுங்க அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டை போக்க, அரிசியை இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

அரிசி தட்டுப்பாடு

இதன்படி, இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி கையிருப்பு நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

NO COMMENTS

Exit mobile version