முத்து நகரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விவசாயிகளை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம்(29) மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயல பிரிவில் உள்ள முத்துநகர் விவசாய பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸாரினால் கடந்த (27) ஆம் திகதி முத்துநகர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விளக்கமறியல்
குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் மிகுதி 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த விவசாயிகளை இம்ரான் மஹ்ரூப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
