Home இலங்கை சமூகம் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு! மாணவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு! மாணவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து

0

பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் இதனை தெரிவித்துள்ளார்.

கோரிக்கை

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு மாணவர்கள் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பாடசாலை உபகரணங்களிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் என்பற்றின் விலையை கருத்தில்கொண்டு பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

NO COMMENTS

Exit mobile version