Home இலங்கை பொருளாதாரம் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

0

இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) கடந்த 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் அதிகரித்த வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் (Lalith de Alwis) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 20 ஆம் திகதி 29 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொசன் பூரணை தினம்

இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 35.8 மில்லியன் ரூபாய் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் (Anuradhapura) மற்றும் பொலன்னறுவை (Polonnaruwa) பகுதிகளுக்கு நடத்தப்பட்ட விஷேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேருந்து சேவையின் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/increase-in-income-of-sltb-poson-poya-1719309126

NO COMMENTS

Exit mobile version