Home இலங்கை சமூகம் திருமலையில் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் விசனம்!

திருமலையில் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் விசனம்!

0

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் கட்டாக்காளி மாடுகளின்
தொல்லைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் கட்டாக்காளி கால்நடைகள் மக்கள் அதிகளவில் பயணிக்கும் பிரதான வீதிகள், உள்
வீதிகளில் நடமாடுவதால் பாதசாரிகளும், வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை
எதிர் நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு முன்னால் கட்டாக்காளி மாடுகள்
அசிங்கப்படுத்திசே செல்வதாக தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கள்

கட்டாகாளி மாடுகளுடன் மோதி பல்வேறு விபத்துச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக
தோப்பூர் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

இதனால் வீதிகளில் உலாவி தெரியும் கட்டாகாளி கால்நடைகளை கட்டுப்படுத்த
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோப்பூர் பிரதேச
மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version