Home இலங்கை பொருளாதாரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு

இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு

0

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2025 ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், இலங்கையர்களின் அந்நியச் செலாவணி பணம்
அனுப்புதல் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 1.32 டிரில்லியன்)
தாண்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தின் தொகை 3.71 பில்லியன் அமெரிக்க டொலர்களாக
இருந்தது.

வெளிநாட்டு நேரடி முதலீடு

இந்தநிலையில் கடந்த ஏழு மாத பணம் அனுப்புதலின் மதிப்பு 2025 பாதீட்டில் ஆண்டு
வருமான வரி வசூலிப்பு மதிப்பீட்டை விட அதிகமாகும்.

மேலும் நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட அரச சம்பளம் மற்றும் ஊதியங்களை
செலுத்தவும் இது போதுமானது.

இந்த 4.43 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் அனுப்புதலானது, 2025 முதல் பாதியில்
கிடைத்துள்ள 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை விட
கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாகும்.

2025 ஜூலை மாதத்தில் மட்டும், இலங்கையர்களின் பணம் அனுப்புதல் 697.3 மில்லியன்
அமெரிக்க டொலர்களாக இருந்தது
அந்த மாத சுற்றுலா வருமானம் 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

NO COMMENTS

Exit mobile version