Home இலங்கை சமூகம் அதிகரிக்கும் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை: 9 மரணங்கள் பதிவு

அதிகரிக்கும் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை: 9 மரணங்கள் பதிவு

0

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையினால் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (National Dengue Control Unit) தெரிவித்துள்ளது.

இம்மாதம் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

14 அபாய வலயங்கள்

இந்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.

அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு (Colombo) மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், 5,624 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதச் சம்பளத்தை பெறாமல் புறக்கணித்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் !

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

அதன் பின்னர், அதிக டெங்கு நோயாளர்கள் யாழ்.மாவட்டத்தில் (Jaffna) பதிவாகியுள்ளதுடன், 3,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 2,487 பேரும், கண்டி (Kandy) மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தில் 1,441 பேரும், களுத்துறை (Kalutara) மாவட்டத்தில் 1,372 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

NO COMMENTS

Exit mobile version