Home இலங்கை பொருளாதாரம் டொலர் விற்பனை விலையில் உயர்வு..! மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு

டொலர் விற்பனை விலையில் உயர்வு..! மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்றையதினத்துடன்(7) ஒப்பிடுகையில் இன்றையதினம்(8.7.2026) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 339.73 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 439.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 454.94 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.16ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.33 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.22ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253.74ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.51 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/increase-in-the-selling-rate-of-the-us-dollar-1783492746

NO COMMENTS

Exit mobile version