Home இலங்கை பொருளாதாரம் கராம்பு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

கராம்பு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

0

சந்தையில் கராம்புகளின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சந்தையில் ஒரு கிலோகிராம் உலர்ந்த கராம்பின் விலை தற்போது 2,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பச்சை கராம்பின் விலை 800 ரூபா வரை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் (Department of export Agriculture) தெரிவித்துள்ளது.

 கராம்பு பயிர்ச்செய்கை

கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா, மற்றும் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவில் கராம்பு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கராம்புக்கு வெளிநாட்டில் நல்ல கேள்வி உள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையில் அண்மைக்க காலமாக உப்பின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version