Home விளையாட்டு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய தமிழக வீரர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய தமிழக வீரர்கள்

0

நியூசிலாந்துக்கு (New Zealand) எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய (India) அணியில் இடம் பெற்றிருக்கும் இரண்டு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக பந்து வீசியுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (24) பூனேவில் தொடங்கியது

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 தமிழக கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணியின் மற்ற வீரர்களின் பந்துவீச்சுக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.

ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக பந்துவீசி நியூஸிலாந்து விக்கெட்டை கைப்பற்றினார்கள்

இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) கடுமையாக போராடி நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பிறகு வோஷிங்டன் சுந்தர் தன்னுடைய அபாரமான சுழற் பந்துவீச்சால் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ள வோஷிங்டன் சுந்தர் (Washington Sundar) பந்து வீசியது, தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணி 

பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

3-வது டெஸ்ட் நவம்பர் 1-ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

எஞ்சி இருக்கும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version