இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் (Jaffna) இந்திய துணைத்
தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வுகள் இன்று (26) காலை 09 மணிக்கு யாழ் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய
துணைத்தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில்
இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குடியரசு தின வாழ்த்து
இந்தநிலையில், யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை
எற்றிவைத்தார்.
இதையடுத்து, இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள்
வாசிக்கப்பட்டதுடன் இந்திய முணைத்தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் அவர்களது
குடும்பத்தினரின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தநிகழ்வில், துணைத் தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்
மற்றும் இந்திய மற்றும் இலங்கை மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தியாவின் தேசிய கீதம்
அத்தோடு, கண்டி (Kandy) உதவி இந்தியத் தூதுவர்
வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின்
உத்தியோகபூர்வ இல்லத்திலும் குடியரசு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 76வது குடியரசு தினத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்திய உதவி
உயர்ஸ்தானிகராலயத்தின் கட்டடம் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அத்தோடு, இந்நிகழ்வுக்கு மலையகத்தில் வாழும் இந்திய குடும்பங்கள் உட்பட
அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் பிரதிநிதிகள் மற்றும் அனுநாயக்கத் தேரர்கள்,
இந்து, இஸ்லாமிய சமய பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், கண்டி தமிழ் வர்த்தகர்
சங்கப் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.
இதன்போது, இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம்
இசைக்கப்பட்டதையடுத்து, இந்திய குடியரசு தலைவரின் ஆசிச் செய்தியை
உதவித் தூதுவர் வீ.எஸ்.சரண்யா வாசித்தமை குறிப்பிடத்தக்கது.
