Home இலங்கை அரசியல் தலைநகர் கொழும்பில் இன்று தெரிந்த இந்தோ சீன கணக்குகள்!

தலைநகர் கொழும்பில் இன்று தெரிந்த இந்தோ சீன கணக்குகள்!

0

டித்வா சூறாவளி புரட்டிப்போட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் போர்வையில் இந்தோ பசுபிக் போட்டியை மையப்படுத்தி ஏட்டிக்குப்போட்டி மிசன்கள் இன்று (23.12.2025) கொழும்பில் இந்தியா மற்றும் சீனாவால் நகர்த்தப்பட்டன.

இலங்கைக்கு மேலதிமான 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை சந்திப்புகள் தீவிரம் பெற மறுபுறத்தே சீன உயர்மட்டக்குழுவின் சந்திப்புக்களும் நடந்தன.

அனுர அரசாங்கத்தைப்பொறுத்தவரை கண்வைக்கபடும் இந்தோ பசுபிக் அரசியலை சமாளிக்க சவால்களை சந்திக்கும் அதேவேளை உள்ளுரில் உள்ளுராட்சிகளிலும் சவால்களை சந்திப்பதற்குரிய புதிய சாட்சியாக தலைநகர் கொழும்பு மாநகர சபையில் அதன் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளது.

அனுர தரப்பு கொழும்பு மாநகரசபையில் மண்கவ்வியமை எதிரணியில் உள்ள தமிழர் தரப்புக்கு சில துருப்புகளை கொடுத்தாலும் அவர்களின் தரப்பிலும் சிறிதரன் விடை சொல்ல வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.

சிறிலங்கா இராணுவ அதிகாரியான கேர்ணல் ராஜசிங்கவை நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அனுர தரப்பு முன்வைத்த திட்டத்துக்கு அரசியலமைப்பு பேரவையில் ஒரு பிரதிநிதியாக உள்ள சிறிதரன் அரசுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்த விடயத்தில் இப்போது வினாக்கள் எழும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்திவீச்சு…….

https://www.youtube.com/embed/qkOj9Pzf-J4

NO COMMENTS

Exit mobile version