Home இலங்கை குற்றம் பாகிஸ்தான் படைவீரர் ஒருவரை கைது செய்த இந்திய எல்லைப்படையினர்

பாகிஸ்தான் படைவீரர் ஒருவரை கைது செய்த இந்திய எல்லைப்படையினர்

0

இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படை உறுப்பினர் ஒருவரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்திய எல்லை படைவீரர் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்துள்ள நிலையில்
அந்த நாட்டைச் சேர்ந்த துணை இராணுவப் படை வீரர், தற்போது இந்தியாவினால்
தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் மறுப்பு

முன்னதாக ஜம்மு காஸ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில், 26 பொதுமக்களை கொலை
செய்த சம்பவத்துக்கு பாகிஸ்தானின் உதவியை பெறும் தீவிரவாதிகளே காரணம் என்று
இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது.

எனினும் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version