Home இந்தியா இந்தியாவில் முதல் எபோலா பாதிப்பு அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் அடையாளம்

இந்தியாவில் முதல் எபோலா பாதிப்பு அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் அடையாளம்

0

இந்தியாவின் – ராஜஸ்தானில் எபோலா வைரஸ் நோயின் சந்தேகத்திற்கிடமான ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த ஆய்வக உறுதிப்படுத்தலுக்கான அறிக்கைக்கு காத்திருக்கும் வேளையில் சுகாதார அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளைச் செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் அரேபியா விமானத்தில் இன்று ஷார்ஜாவிலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்த உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இந்த  எபோலா வைரஸ் நோய்க்கான அறிகுறிகளைக் காட்டியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

விமான நிலையப் பரிசோதனை

இதன்போது குறித்த பயணிக்கு வழக்கமான விமான நிலையப் பரிசோதனையின்போது நோய் நிலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும்  குறித்த பெண்ணுக்கு எபோலா நோய் இருப்பது கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் சுகாதார கூறியுள்ளனர்.

அவருக்கு அந்த நோயை ஒத்த அறிகுறிகள் தென்பட்டாலும், ஆய்வகப் பரிசோதனைக்குப் பிறகே உறுதியான நோயறிதலைச் செய்ய முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலதிகப் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நிறுவப்பட்ட தொற்றுநோய் நெறிமுறைகளின் கீழ் அவர் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

Source: https://ibctamil.com/article/india-identifies-first-ebola-patient-1780661204

NO COMMENTS

Exit mobile version