Home சினிமா சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம் என்ன தெரியுமா?

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம் என்ன தெரியுமா?

0

சிங்கப்பெண்ணே

மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல்ஜித் என சில புதுமுகங்கள் நடிக்க கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் சிங்கப்பெண்ணே.

தனுஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் இதுவரை 300 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கிராமத்தில் இருந்து சென்னை வந்த ஆனந்தியின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தை பற்றி காட்டிய இந்த தொடர் கடந்த சில மாதங்களாகவே லவ் டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்த கதைக்களம்

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே தொடரின் அடுத்த கதைக்களம் என்ன என்ற விவரம் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. அதாவது மகேஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற உள்ளது தெரிகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தை படமாக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version