Home இந்தியா பாகிஸ்தானுக்கு அடிக்கு மேல் அடி : அலற விட போகும் இந்தியா

பாகிஸ்தானுக்கு அடிக்கு மேல் அடி : அலற விட போகும் இந்தியா

0

ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir) –  பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். அமைப்பினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் என்பது இந்திய பாதுகாப்பு பிரிவு மிகவும் ஒரு பலமான தாக்குதலை மேற்கொள்ள போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியாவின் பதிலடி அதாவது இந்தியாவின் இராணுவ ரீதியான பதிலடி என்பது இஸ்ரேலின் பாணியில் தான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதில் தாக்குதல் மேற்கொண்டதால் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தாக்குதலை தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ள போகிறது என்பது தெரிகிறது.

ஒக்டோபர் 07 தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் , மொசாட்டின் பதில் நடவடிக்கை எவ்வாறு அமைந்திருந்தது, எதிரிகளின் நிதி மூலத்தை மொசாட் எவ்வாறு செயற்பட்டது, இஸ்ரேல் மேற்கொண்ட சைபர் தாக்குதல் போன்ற தாக்குதல் போலவே இந்தியாவின் பதில் தாக்குதல் இடம்பெறும் என நம்பப்படுகிறது. 

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரிக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ தலைமைகள் உறுதியாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.

அந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி

https://www.youtube.com/embed/j4YPHAEjxIw

NO COMMENTS

Exit mobile version