Home இலங்கை சமூகம் இந்திய – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்திய – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

0

Courtesy: Sivaa Mayuri

இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் சேவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையே இயக்கப்பட உள்ளதாக IndSri Ferry Service Pvt லிமிடெட் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அனுமதிச்சீட்டு பதிவுகள்

இதன்படி தமது பயணிகள் கப்பலான ‘சிவகங்கை’ இரண்டு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆயத்தமாக ஓகஸ்ட் 13ஆம் திகதி (செவ்வாய்கிழமை) நாகப்பட்டினம் துறைமுகத்தில் இணையம் மூலமான அனுமதிச்சீட்டு பதிவுகள் ஆரம்பமாகின்றன.

முன்னதாக, இந்த சேவை, மே 13 அன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் தவிர்க்க முடியாத இணக்க தேவைகள் காரணமாக அது தாமதமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

NO COMMENTS

Exit mobile version