Home விளையாட்டு இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

0

இந்திய(India) மற்றும் இலங்கை(Sri lanka) அணிகளுக்கிடையிலான ரி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, இந்திய அணியின் ரி20 தொடரின்  அணித்தலைவராக சூர்யகுமார் யாதவும்(Suryakumar Yadav), ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மாவும்(Rohit sharma) அணித்தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

ரி20 தொடர்

இதில் முதல் ரி20 போட்டி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயற்படவுள்ளார்.

மேலும், ஒருநாள் மற்றும் ரி20 அணிக்கு சுப்மன் கில்(Subman Gill) துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி

இதற்கமைய, ரி20 அணியில், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வோசிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, மொஹமட் சிராஜ்

ஒருநாள் தொடர் அணியில், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வோசிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version