Home இலங்கை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயார் : அமைச்சர் டக்ளஸ்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயார் : அமைச்சர் டக்ளஸ்

0

வன்முறையற்ற ஜனநாயக முறைப்படி பிரச்சினைகளுக்கு தீர்வினை காண மக்கள்
அணி திரளும் பட்சத்தில் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாராகவே இருக்கின்றேன்
என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

இளம் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக ஈவினை கிராம் தெரிவாகியுள்ள நிலையில்
அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர், ஈவினை கிராமத்தின் வளர்ச்சி அந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அவர்களின் குரலாக தன்னுடைய பங்களிப்பு எப்போதும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 விவசாய உபகரணங்கள் 

அதேவேளை, இந்நிகழ்வில் விவசாய முயற்சியாளர்களுக்கான விவசாய உபகரணங்களும் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின்
வழிகாட்டலில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில் இளம்
விவசாய முயற்சியாண்மை கிராமம் என்ற திட்டம் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு
பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு கிராமம் தெரிவுசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையில் யாழ். மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஈவினை கிராமம் தெரிவு
செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் படி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவின் முன்மொழிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இந்த இளம் விவசாய
முயற்சியாண்மை கிராமமான ஈவினை கிராமம் தெரிவாகியுள்ளது. 

மேலும், ஈவினை கற்பக விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளிலும் அமைச்சர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர், வலி தெற்கு பிரதேச செயலர், மாகாண
விவசாய பணிப்பாளர், கமநல சேவைகள் பணிப்பாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள்
விவசாய மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version