Home சினிமா இந்தியன் 2 திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

இந்தியன் 2 திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

0

இந்தியன் 2 

கடந்த வாரம் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களில் இப்படம் சிக்கியது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தின் நீளம் விமர்சன ரீதியாக இந்தியன் 2விற்கு பின்னடைவை கொடுக்கின்ற காரணத்தினால், படத்திலிருந்து 11 நிமிட காட்சிகளை நீக்கி, நேற்றில் இருந்து புதிய வெர்ஷன் இந்தியன் 2 திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

வசூல் 

முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பி இந்தியன் 2 அதற்கடுத்தடுத்த நாட்களில் சற்று பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்க துவங்கியது. இந்த நிலையில், 6 நாட்களை கடந்துள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம்.

இதுவரை உலகளவில் இந்தியன் 2 திரைப்படம் ரூ. 138 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்த்த இந்தியன் 2 திரைப்படம் இனி வரும் நாட்களில் எப்படி வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/indian-2-movie-6-days-box-office-collection-1721274306

NO COMMENTS

Exit mobile version