Home சினிமா 11 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இந்தியன் 2 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

11 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இந்தியன் 2 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

இந்தியன் 2

கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த படம் இந்தியன் 2. இப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளிவந்தது.

இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பை இந்தப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே மக்களுடைய கருத்தாக இருக்கிறது.

இந்தியன் 2 இத்திரைப்படம் கடந்த 11 நாட்களாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல்

அதன்படி , இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில் ரூ. 51.75 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் ஏதிர்பார்பை பார்க்கும்போது இது இப்படத்துக்கு கிடைத்துள்ள குறைவான வசூலாகாவே கருதப்படுகிறது. மேலும் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Source: https://cineulagam.com/article/indian-2-movie-tamilnadu-box-office-1721710198

NO COMMENTS

Exit mobile version