அடுத்த வருடம்(2025) ஜனவரி 02 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் முதலாம் தவனை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14.09.2024) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் நாட்காட்டி மற்றும் பரீட்சை அட்டவணையை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும்.
கல்வி நடவடிக்கை
ஜனவரி 20, 2025 ஆம் திகதி முதல் முதலாம் தவனை கல்வி நடவடிக்கையின் முதல் நாள் ஆரம்பமாகும்.
அதற்கான சீருடைகள், பாடப்புத்தகங்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
மேலும், முந்தைய சாதாரண தர பரீட்சை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும்.” என்றார்.