Home சினிமா ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் இந்தியன் 2.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் இந்தியன் 2.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

0

இந்தியன் 2

2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் வருகிற 12ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

சமீபத்தில் தான் இப்படத்திலிருந்து ட்ரைலர் வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் கமல் ஹாசனின் கடின உழைப்பு ட்ரைலரில் இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்றால், திரையில் கண்டிப்பாக பட்டையை கிளப்பி இருப்பார் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ப்ரீ புக்கிங்

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் USA ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் USA ப்ரீ புக்கிங்கில் இதுவரை $65,200 வரை வசூல் செய்துள்ளது. இதனுடைய இந்திய மதிப்பு ரூ. 54 லட்சத்திற்கும் மேல் இருக்கும்.

இதன்மூலம் இந்தியன் 2 திரைப்படத்திற்கு USA-வில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/indian-2-usa-pre-booking-1719812127

NO COMMENTS

Exit mobile version