Home முக்கியச் செய்திகள் இந்தியாவின் பிரபல நடிகர் துப்பாக்கி சூட்டில் படுகாயம்

இந்தியாவின் பிரபல நடிகர் துப்பாக்கி சூட்டில் படுகாயம்

0

இந்தியாவின்(india) பிரபல நடிகர் கோவிந்தா(govinda) செவ்வாய்க்கிழமை(01) அதிகாலை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தவறுதலாக காலில் சுட்டதில் படுகாயமடைந்தார்.

நடிகர் தனது வீட்டில் இருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் காலில் பலத்த காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நடிகர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் காயம்

அதிகாலை 4.45 மணியளவில் அவரது உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் காயம் ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

கோவிந்தாவின் மேலாளர் ஷஷி சின்ஹா ​​ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,

60 வயதான நடிகர், சிவசேனா தலைவருடன் கொல்கத்தாவுக்கு செல்ல தயாராகி இருந்தார்.

அவர் தனது துப்பாக்கியை அதன் கேஸில் சேமிக்க முயன்றார், அப்போது அவர் தற்செயலாக அதை கைவிட, அதிலிருந்து ரவை வெளியேறி வெடித்து சிதறியது.

தற்போது மருத்துவமனையில்

“மருத்துவர் ரவையை அகற்றிவிட்டார், அவருடைய உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்,” என்று சின்ஹா ​​மேலும் தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/indian-actor-govinda-accidentally-shoots-himself-1727791255?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version