Home இலங்கை சமூகம் இலங்கையில் நடிகர் ரவி மோகன் : இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

இலங்கையில் நடிகர் ரவி மோகன் : இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

0

இந்திய நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோர்,வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் (18.07.2025) இலங்கை தேசிய திரைப்படக் கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், இலங்கையின் திரைப்பட சுற்றுலா திறனை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புகள் மூலம் உள்ளூர் திரைப்படத்துறையை வளர்ச்சியடையச் செய்வது குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

இலங்கையில் வெளிநாட்டு திரைப்படங்களை உருவாக்க ஊக்குவிக்கும் வகையில் கொள்கை திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் உறுதியாக செயல்படுகின்றது என அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தேசிய திரைப்படக் கழகத்தின் தலைவர் சுதத் மஹாதிவுல்வேவவும் கலந்து கொண்டார்.

சினிமா மற்றும் இசை, சுற்றுலா, கலாசார பரிமாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய பங்குகளை வகிக்கின்றன என்பதும் தொடர்பில் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version