Home இலங்கை சமூகம் செம்மணிக்காக கைக்கோர்த்த தென்னிந்திய நடிகர்கள்: இழுத்தடிக்கும் இலங்கை அரசு

செம்மணிக்காக கைக்கோர்த்த தென்னிந்திய நடிகர்கள்: இழுத்தடிக்கும் இலங்கை அரசு

0

இலங்கையிலிருந்து சர்வதேசம் வரை அண்மைக்காலமாக பாரிய பேசுபொருளாகியுள்ள விடயம், செம்மணி மனித புதைக்குழி விவகாரம் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் இல்லை.

காரணம், தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் வெளிவரும் பின்னணியில்  இவ்விடயம் பாரிய கேள்விக்குரிக்குள்ளாவதுடன் , அங்கு இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறலுக்கான நீதி கோரல் என்பது அதிகம் பேசப்படக்கூடிய விடயமாக மாறிள்ளது.

இதில், சர்வதேச அளவில் தமிழ் மக்களுக்காக அனைவரும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் தென்னிந்திய நடிகர்களும் செம்மணி விவகாரத்திற்கான சரியான நீதி வேண்டும் என்ற ரீதியில் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், நடிகர் சு.சத்தியராஜ் (Sathyaraj), இயக்குனரும் நடிகரும் இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர் (T. Rajendar) ஆகியோர் தமது ஆதரவினை தெரிவித்ததுடன் செம்மணி விவகாரத்தினை இலகுவில் கடந்து செல்லக்கூடாது என்ற ரீதியிலும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இருப்பினும், இலங்கை அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் வாய்திறக்காமல் உள்ள நிலையில் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற விடயத்தில் பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் மற்றும் நம்பிக்கை இன்மையை உருவாக்குவாதாகவும் இருப்பதாக மக்கள் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பிலும், சர்வதேச அளவில் தமிழ் மக்களுக்கான நீதி தொடர்பிலும், இலங்கை அரசாங்கம் செம்மணி விவகாரத்தில் எடுக்க போகும் தீர்மானங்கள் தொடர்பிலும், அண்மைக்காலமாக இடம்பெற்ற அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் மற்றும் பலதரப்பட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி,

 

 

https://www.youtube.com/embed/ok03pUnj8Qg

NO COMMENTS

Exit mobile version