Home இலங்கை சமூகம் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கம்

0

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் (Mumbai) இருந்து புறப்பட்ட விமானமொன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) தரையிறங்கியுள்ளது.

இந்தியன் ஏர்லைன்ஸ் (Indian Airlinesவிஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானம் இன்று (19) பிற்பகல் மூன்று மணியளவில் தரையிறங்கியுள்ளது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் 96 பயணிகளும் மற்றும் எட்டு பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பயணிகள் வெளியேற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/indian-airline-vistara-lands-bia-due-to-bomb-scare-1729337105

NO COMMENTS

Exit mobile version