Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷாவின் வளர்ச்சியை கண்டு வியப்படைந்த இந்திய உயர்ஸ்தானிகர்

றீ(ச்)ஷாவின் வளர்ச்சியை கண்டு வியப்படைந்த இந்திய உயர்ஸ்தானிகர்

0

வடக்கு மாகாணத்திற்கு இன்றையதினம் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அவரது பாரியார் வடக்கில் மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சி கண்டு பலரதும் பாராட்டைப் பெற்ற றீ(ச்)ஷா சுற்றுலாத் தலத்திற்கும் சென்றிருந்தனர்.

இவ்வாறு வந்த அவர்களை றீ(ச்)ஷா, லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் வரவேற்றார்.

றீ(ச்)ஷாவின் வளர்ச்சி

அவர்கள் றீ(ச்)ஷாவின் பல்வேறு கட்டுமானங்களையும் பார்வையிட்டு வியந்து போயினர்.வடக்கில் மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சி கண்ட இந்த நிறுவனத்தை எவ்வாறு கட்டியெழுப்பினீர்கள் எனவும் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனிடம் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி உட்பட அனைத்து பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு றீ(ச்)ஷாவிற்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவர் தம் பாரியாருக்கு தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version