லண்டனில் உள்ள இந்திய உணவகத்தில் மர்ம நபர்கள் நடத்திய தீ வைப்பு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லண்டனின் இல்பர்ட் பகுதியில் வுட்போர்ட் அவென்யூவில் அமைந்துள்ள இந்தியன் அரோமா என்ற உணவத்தில் மர்ம நபர்கள் தீ வைப்பு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மர்ம நபர்கள் தீ வைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மீட்பு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதலில் 5 பேர் வரை காயமடைந்த நிலையில், 3 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரையும் காவல்துறையினர் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.