கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முதியவர் நேற்று வெள்ளிக்கிழமை (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு விட்டு யாழ்ப்பாண (Jaffna) நோக்கி கார் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
அதன் பின்னர் அவரது மகனான பிரபாகரன் சர்மா அக்க்ஷய் (வயது 27) உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 15 ஐ சேர்ந்த துரைச்சாமிக்குருக்கள் சுவாமிநாதஐயர் (வயது 69) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும் பிரபாகரன் சர்மாவின் மனைவி சீதாலக்ஷ்மி (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்) தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
