Home இலங்கை சமூகம் யாழில் சோகம் – இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு

யாழில் சோகம் – இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு

0

ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இந்திய துணைத் தூதரக கலாசார உத்தியோகத்தர் சச்சிதானந்த குருக்கள் பிரபாகரனின் மகனான அக்க்ஷய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்றிரவு (01) யாழ். போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) அவசர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சர்மா அக்க்ஷய் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து

தனது தனிப்பட்ட காரணத்துக்காக குடும்பத்தினருடன் வட இந்தியாவுக்குச் சென்று விட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் சர்மா தனது
குடும்பத்தினருடன் காரில் யாழ்ப்பாணத்தை நோக்கி கடந்த 26ஆம் திகதி பயணித்த வேளை வவுனியா – ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானர்.

வாகன விபத்தில் பிரபாகரன் குருக்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சீதாலக்‌ஷ்மி (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மூத்த மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அவசர விகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அக்க்ஷய் நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

மேலும், பிரபாகரன் சர்மாவின் மனைவி மற்றும் மாமனார் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version