அண்மையில் அகால மரணமான இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி..
அவர், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (01.06.2025) இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கிய, இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் மற்றும் அவரின் தாய் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், தற்போது, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
