Home இலங்கை அரசியல் இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் : கடற்றொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் : கடற்றொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

0

பேச்சுவார்த்தை மூலம் இலங்கை (Sri Lanka) – இந்திய (India) கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள்
தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள்
ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சாங்கானை பகுதியில் நேற்று (29) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடற்றொழிலாளர்களின் தலைவர்களை நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால்,
நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார்.

தொப்புள்கொடி உறவு

உங்களுடைய பிள்ளைகள்
எங்களுடைய தொப்புள்கொடி உறவுகள், எங்களுக்கு அண்மித்த நாடு. அந்தவகையில்
நாங்கள் நல்ல முறையில் எங்களுடைய உறவுகளை பேணி பாதுகாப்பதற்கே
முயற்சிக்கின்றோம்.

அந்த முயற்சிக்கு வேட்டு வைக்கின்ற வேலையாகவே இந்திய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுடைய
செயற்பாடுகள் காணப்படுகின்றது“ என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version