Home இந்தியா டெல்லி செங்கோட்டையில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் தான்…! உறுதிப்படுத்திய இந்திய அரசு

டெல்லி செங்கோட்டையில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் தான்…! உறுதிப்படுத்திய இந்திய அரசு

0

தலைநகர் டெல்லியின் (Delhi) பரபரப்பான பகுதியில் நடந்த  கார் குண்டு வெடிப்பு, ஒரு ‘பயங்கரவாத தாக்குதல்’ என்பதை இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது உலக நாடுகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத செயல் என்றும், இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி (Narendra Modi) தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கொடூரமான பயங்கரவாத சம்பவம்

அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொண்ட இந்த ‘கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை’ சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக அமைச்சரவை கூறியிருந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகள், அவர்களின் கூட்டாளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களைக் கண்டறிந்து, தாமதமின்றி அவர்களை நீதியின் முன் நிறுத்துவதே இதன் நோக்கமாகும்.

காவல்துறை, தடயவியல் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

குண்டுவெடிப்பில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஓடும் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அதில் மூன்று பேர் பயணம் செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version