Home இலங்கை கல்வி ஆசிரிய நியமனம் குறித்து கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

ஆசிரிய நியமனம் குறித்து கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

0

தகுதியற்ற பட்டதாரிகள் இனிமேல் எந்தவொரு கட்டத்திலும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்யப்படமாட்டார்கள் என்று கல்வியமைச்சு அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

இதுவரை காலமும் கல்விமாணி பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் நேரடியாக ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர்.

ஆசிரியர் நியமனம் 

இலங்கையின் அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தினால் மாத்திரம் இதுவரை காலமும் வழங்கப்பட்ட கல்விமாணி பட்டப்படிப்பு தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் தனியார் பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்படுகின்றது.

அவ்வாறான தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்விமாணி பட்டப்படிப்பு தகுதியற்ற நிலையில் உள்ளதாக பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் இனிவரும் காலங்களில் தகுதியற்ற கல்விமாணி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version