Home இலங்கை அரசியல் நட்டத்தில் பலாலி விமான நிலையம்..! பருத்தித்துறை துறைமுகத்தில் இந்தியா – கடற்றொழில் அமைச்சர்

நட்டத்தில் பலாலி விமான நிலையம்..! பருத்தித்துறை துறைமுகத்தில் இந்தியா – கடற்றொழில் அமைச்சர்

0

யாழ் பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுக்களை நடத்தியுள்ளதாக  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குகின்றது என்று இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மேற்படி விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய
தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்
கையிலேயே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பலாலியை மாற்ற முடியாது

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குகின்றது.

எனினும், அதனை நவீன மயமாக்கி வினைத்திறனான சேவையை
முன்னெடுக்க வேண்டும். 

பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது.

இந்த அபிவிருத்தித் திட்டங்களை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை
படிப்படியாக செயற்படுத்தவுள்ளோம்.

காங்கேசன்துறை துறைமுகம்

பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுகளை நடத்தியுள்ளோம்.

அண்மையில் தொழில்நுட்பக் குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து
சென்றுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குகின்றது என்றார்.  

NO COMMENTS

Exit mobile version