முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான
முனைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், முள்ளிவாய்க்காலில்
அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொதுமக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (13) விஜயம் மேற்கொண்டிருந்த திருமாவளவனை முல்லைத்தீவை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரவழைத்து பொன்னாடை
போர்த்தி வரவேற்பு வழங்கி இருந்தனர்.
இதையடுத்து, கவிஞர் யோ.புரட்சி தன்னுடைய ஆயிரம் கவிதை நூல்
புத்தகத்தை தொல் திருமாவளவனிடம் கையளித்துள்ளார்.
இதன்பின்பு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருகை தந்த அவர்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர் மாலை
அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி – தவசீலன்
https://www.youtube.com/embed/crT0S4FB52I
