கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாவுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(21) காலை விமான
நிலையப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 30 வயதுடைய இந்தியப் பிரஜையே கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை
சந்தேகநபர் குவைத்தில் இருந்து இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான
நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலையப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர்
கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்து ரி – 56 ரக துப்பாக்கிக்குப்
பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
சந்தேகநபர் குவைத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் எனவும்,
பணியில் இருக்கும் போது தரையில் விழுந்து கிடந்த தோட்டா ஒன்றை இவ்வாறு எடுத்து
வந்தார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு
நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
