Home உலகம் தொடர்ந்து ஈரான் கையில் சிக்கும் மொசாட் உளவாளிகள் : இஸ்ரேலுக்கு அடுத்தடுத்து விழும் அடி

தொடர்ந்து ஈரான் கையில் சிக்கும் மொசாட் உளவாளிகள் : இஸ்ரேலுக்கு அடுத்தடுத்து விழும் அடி

0

“இஸ்ரேலிய (Israel) உளவு சேவைகளுடன் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் செய்திகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் 13 முதல் இன்று (21) வரை குறித்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் அளித்த தகவலின்படி, சியோனிச ஆட்சியின் உளவு சேவைகளுடன் தொடர்புடையவர்கள், பொதுமக்களின் கருத்தை தொந்தரவு செய்தவர்கள் மற்றும் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் 24 பேர் கைது

முன்னதாக, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரை வியாழக்கிழமை ஈரானிய காவல்துறையினர் கைது செய்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், உளவு பார்த்ததற்காக ஒரு ஐரோப்பிய நாட்டவரும் கைது செய்யப்பட்டதாக ஈரான் காவல்துறையினருடன் தொடர்புடைய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தஸ்னிம் நேற்றைய தினம் செய்தி (20.06.2025) வெளியிட்டுள்ளது.

ஆனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட திகதி குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை.

இதேவேளை, நாடு முழுவதும் குறைந்தது 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வேயை தளமாகக் கொண்ட அரச சாரா அமைப்பான ஈரான் மனித உரிமைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9CyWicUhu9A

NO COMMENTS

Exit mobile version