Home இலங்கை சமூகம் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா திருகோணமலையில்

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா திருகோணமலையில்

0

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று இந்த கப்பல் வந்தடைந்ததும் இலங்கை
கடற்படையால் இது அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது.

ராஜ்புத் வகுப்பு கப்பல்

இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது மற்றும் 147 மீட்டர் நீளம் கொண்டது.

இந்த கப்பலில் 300 பணியாளர்கள் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் தரித்திருக்கும் காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான
கடற்படை நட்பை வலுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும்
விளையாட்டு நிகழ்ச்சிகளில், இந்திய கப்பலின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று குறித்த கப்பல் இலங்கையில் இருந்து
புறப்பட்டு செல்லவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version