Home இந்தியா ஈழத்துக்காக எழுந்த குரல் இந்திய நாடாளுமன்றில்

ஈழத்துக்காக எழுந்த குரல் இந்திய நாடாளுமன்றில்

0

இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற போது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழக சட்டத்தரணி ஆர். சுதா (R. Sudha) இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்திய தேர்தலின் முடிவுகளின் நேற்றையதினம்(4) வெளியானதையடுத்து மயிலாடுதுறையில் அளிக்கப்பட்ட 10,88,182 வாக்குகளில் 5,18,459 வாக்குகளை பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகளையும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

யாழில் இடம்பெற்ற குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம்

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெண்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆர்.சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் வழக்கறிஞர் சுதா பங்குபற்றியிருந்தார்.

மேலும், அவர் இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது, காங்கிரஸுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு சோனியா காந்தியின் உருவபொம்மை எரிக்கும் போராட்டத்திலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தேசிய உலகிற்கு தமிழ் பொதுவேட்பாளர் தேவை என வலியுறுத்து

இலங்கைத் தமிழரான ஜோர்ஜ் அழகையாவின் உயில் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version