Home முக்கியச் செய்திகள் லண்டன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய அரசியல்வாதி

லண்டன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய அரசியல்வாதி

0

நடந்து முடிந்த இந்திய பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சி வெற்றிபெற்றமை சர்வதேச அரங்குகளில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் குறித்த கட்சியின் பெயரும் அதன் தலைவரின் பெயரும் இடம்பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் 10ஆவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 வருட அரசியல்

கடந்த 2005 இல் இருந்து 20 வருடங்களாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

இந்தியாவின் மாநிலமொன்றின் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version