Home இலங்கை சமூகம் இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை: அன்னராசா வெளியி்ட்டுள்ள தகவல்

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை: அன்னராசா வெளியி்ட்டுள்ள தகவல்

0

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நல்ல தீர்வை காண்பதற்குரிய நல்ல
சமிக்ஞையாக தமிழக கடற்றொழிலாளர்கள் உடனான சந்திப்பு அமைந்தது என வட மாகாண கடற்றொழிலாளர்
இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் இன்று மாலை நடாத்திய ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே இவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

 கடற்றொழில் பிரச்சினை

மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருவதை வடக்கு கடற்கரை சமூகம் வரவேற்பதோடு மகிழ்ச்சியும் அடைகின்றது.  

இந்த நிலையில், இலங்கை – இந்திய
கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு பாரத பிரதமரும் இலங்கையினுடைய ஜனாதிபதியும் விட்டுக் கொடுப்போடு நல்லெண்ண அடிப்படையிலே சுமுகமான தீர்வு ஒன்றை மேற்கொண்டு, வடக்கு மாகாணத்தை பிரதிபடுத்துகின்ற 50,000
குடும்பங்கள் இரண்டு இலட்சம் மக்களுடைய வாழ்வாதாரம் தொடர்பான கரிசனையை எடுக்க வேண்டும். 

இந்த இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை காண்பதற்கு வழிகோலும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கடற்றொழில் சமூகத்திற்கு
ஏற்பட்டுள்ளதுடன் அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version