Home இலங்கை சமூகம் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பல்கலை மாணவருக்கு நேர்ந்த துயரம்

இலங்கையில் தங்கியிருந்த இந்திய பல்கலை மாணவருக்கு நேர்ந்த துயரம்

0

மெனிக்ஹின்ன, குண்டசாலை, தம்பராவ பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்திய(india) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீச்சல் குளத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கண்டியில்(kandy) உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சந்தோஷ் என்ற 26 வயது இந்திய பல்கலைக்கழக மாணவராவார்.

நீச்சல் குளத்தில் நிகழ்ந்த அனர்த்தம்

09 பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட குழு ஒன்று கடந்த 16 ஆம் திகதி மெனிக்ஹின்ன, குண்டசாலை, தம்பராவ பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தது.

இன்று (18) அதிகாலை அவர்கள் நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்ந்தனர். இதன்போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர் நீச்சல் குளத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version